கோகுலத்து பாலகனே வா...வா...
குன்றை குடையாக பிடித்தவனே வா....வா...
யதுகுல திலகனே வா....வா....
யசோதை தவ பயனே வா.....வா...
வெண்ணையுண்ட வாயனே வா...வா...
பூதகியை கொன்றவனே வா...வா...
பூதலத்தை ஆள்பவனே வா...வா...
காளிங்க நர்தனனே வா...வா...
கம்ஸனைக் கொன்றவனே வா....வா....
துளசிமாலை அணிந்தவனே வா....வா...
துதி செய்து போற்றுகிறோம் வா...வா...
திரௌபதி மானம் காத்தவனே வா...வா...
பாண்டவர்களை ரட்சித்தவனே வா...வா...
பார்த்தனுக்கு சாரதியே வா...வா...
கீதை உபதேசித்தவனே வா...வா...
என் அருமை கண்ணா வா...வா...